டி20 கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீராங்கனை ஓய்வு!

0
127

டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ் (வயது 36), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் பிரபலமடையச் செய்ததில் மிதாலி ராஜ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.கடந்த 2006 -ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி -20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினர் மிதாலி. 89 சர்வதேச டி -20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவுள்ள மிதாலி ராஜ் 17 அரை சதங்கள் உதவியுடன் 2364 ரன்கள் அடித்துள்ளார்.சராசரி 37.52 ஆகும்.

இந்த நிலையில் டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.