ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் குவித்த கேப்டன்கள் பட்டியல்!! தல தோனிக்கு எந்த இடம்..?

0
150

2008ஆம் ஆண்டு முதன் முதலாக ஐபில் தொடர் துவங்கி 12வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களை அடையாளம் காண இது ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. ஐபில் தொடரில் பல சர்ச்சைகள் நிகழ்ந்தாலும், ரசிகர்களின் தங்களது அணிகளை ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை.

உதாரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்டம் காரணமாக இரு வருடங்கள் தடை செய்தனர். சென்னை அணிக்கு தடையை விலக்க கோரி சென்னையில் ரசிகர்கள் போராடினர். ஆனால், எந்த பலனும் இல்லை.

இரு வருட தடைக்கு பிறகு தல டோனி தலைமையிலான அணி 2018ஆம் ஆண்டு கோப்பையை தட்டி சென்றது. இந்த சீசனிலும் சென்னை அணி 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்தார் நம்ம தல.

ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை அணி கேப்டன்கள் பட்டியல் இதோ..

  1. எம் எஸ் தோனி – 100 வெற்றிகள்
  2. கவுதம் கம்பிர் – 71 வெற்றிகள்
  3. ரோஹித் சர்மா – 55 வெற்றிகள்
  4. விராத் கோஹ்லி – 44 வெற்றிகள்
  5. ஆடம் கில்கிறிஸ்ட் – 35 வெற்றிகள்