ஐபில்-ல தான் முடியல வேர்ல்ட் கப்-ல கோலி விக்கெட்டை கண்டிப்பா எடுத்தே தீருவேன்– ஜோஃப்ரா ஆர்ச்சர் திட்டவட்டம்!!!!

0
106

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் இந்தியா ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். அதன் பின்னர் இந்தாண்டு ஐபிஎல் போட்டில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இவரின் பந்துவீச்சாய்க்கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை வழங்கி இவருக்காக சட்டத்தையே மாற்றி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்த்தது. அந்த தொடரிலும் பாக்கிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார் இவர். அதனால் தற்போது உலககோப்பை அணியில் டேவிட் வில்லே க்கு பதிலாக இவரை சேர்த்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது அதற்க்கு பதிலளித்த ஆர்ச்சர் உலககோப்பை அணியில் இடம்பெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி தனக்கு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தவேண்டும் என்பது கனவு என்றும் கூறினார். அது ஐபிஎல் போட்டியில் தன நடக்கவில்லை உலககோப்பையிலாவது வீழ்த்தவேண்டும் என பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here