ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட்டுகள் வெறும் 120 நொடிகளில் விற்றுத்தீர்ந்த -ரசிகர்கள் அதிர்ச்சி.!

0
118

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. டிக்கெட் விற்பனையை EventsNow என்ற தனியார் நிறுவனமே ஆன்லைனில் மேற்கொண்டு வரும் நிலையில்,இறுதிப் போட்டி என்பதால் இந்த போட்டியைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலாக இருந்தனர்.

இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 39,000 இருக்கைகள் உள்ளன. ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000, ரூ.10,000, ரூ.12,500, 15,000, ரூ.22,500, ரூ.30,000 விலை கொண்ட டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்ட நிலையில் விற்பனை தொடங்கிய 120 நொடிகளிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்பனையானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் பெரும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.