” உலககோப்பை போட்டிக்காக நான் 17 கிலோ வெயிட்டை குறைத்தேன் ” 16 வருடங்கள் கழித்து ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட் வீரர்….

0
166

உலக கோப்பை தொடரில் விளையாடுவது என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு கனவாகவே இருக்கும்.அதில் தேர்வாகுவதற்கு அவர்களின் திறமை மட்டுமல்லாமல் உடல் தகுதியும் முக்கியமானதாக அமைகிறது. பல வீரர்கள் தனது உடல் தகுதி காரணமாக உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இன்சமாம் உல் அக் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார்.

அதில் ,” நான் 2003 உலக கோப்பையில் விளையாடவேண்டும் என்பதற்க்காக 17 கிலோ எடையை குறைத்தேன்” என கூறினார். அனால் இதில் என்ன சோகம் என்றால் அவர் அந்த தொடரில் மொத்தமாகவே 19 ரன்கள் தான் குவித்தார்.