இந்தியாவை பந்தாடிய நியுஸிலாந்து! 80 ரன்கள் வித்யாசத்தில் படுதோல்வி!!

0
143

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 219 ரன்கள் குவித்தது. இந்திய அணி பந்து வீச்சாளர்கள் அனைவரும் சரிசமமாக நியுஸி பேட்ஸ்மேன்களிடம் அடிவாங்கினர்.

அந்த அணியின் துவக்க வீரர் டிம் செய்ர்பெட் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். பின்னர் 220 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் ஓரளவிற்கு நன்றாக ஆடியது. ஆனால், ஆட்டத்தின் போக்கு போகப்போக மாறியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஷிகர் தவான் 29 ரன்களிலும், விஜய்சங்கர் 27 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார் பின்னர் வந்த ரிஷப் பண்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டார்.

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் எம் எஸ் தோனி 31 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். ஆனால், தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா போன்றோர் பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. இதனால் 19.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.