அண்டர்-19 உலககோப்பை: புலிகுட்டிகளை பதம் பார்த்த இந்திய சிங்க குட்டிகள்!

0
111

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்  பட்டம் வென்றுள்ளது.

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில்  நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டும் அடித்த.இந்திய அணியில் அதிகபட்சமாக கரண் 37 ரன்கள் அடித்தார்.வங்கதேச அனியின் பந்துவீச்சில் சமீம்,ரிட்டோன்ஜாய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்திய அணி பந்துவீச்சில் அன்கேட்லேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம்  இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது இந்திய அணி.

இந்திய அணி இந்த கோப்பையையும் சேர்த்து 7-வது  முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.