இது உலககோப்பையா இல்ல டெஸ்ட் மேட்சா!!! கடுப்பான ரசிகர்கள்…

0
121

தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து அரையிறுதி போட்டிகள் துவங்கிவிட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் முதலாவது அரையிறுதி போட்டியானது நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி வீரர்கள் தட்டு தடுமாறி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் குவிந்திருந்தன. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டியானது மழை நிற்கும் வரை ஒத்திவைக்கப்பட்டது. நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டெய்லர் மற்றும் வில்லியம்சன் தலா 67 ரன்கள் குவிந்திருந்தனர்.

மழையானது நேற்று முழுவதும் நிற்காமல் பெய்ததால் நேற்றைய தினம் போட்டியானது சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இது அரையிறுதி போட்டி என்பதால் இதற்க்கு கண்டிப்பாக முடிவு தெரிய வேண்டும். எனவே போட்டியை இன்று தள்ளிவைத்தனர். அதாவது டெஸ்ட் போட்டியை போலவே போட்டியானது விட்டதிலிருந்து தொடரப்படும். கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கோப்பை போட்டியானது இரண்டு நாட்களுக்கு நடைபெறுவது இதுவே முதல் முறை.

இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி கூடுதல் புள்ளியுடன் இருப்பதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதனை காத்திருந்து பார்ப்போம்.