தன் பெயரில் திறக்கப்பட்ட பார்கள் என்னுடையது இல்லை கம்பீர் ட்விட்டரில் பதிவு..!

0
166

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் . குடியரசு தினத்தன்று பத்மஶ்ரீ விருது பெற்றார். அதுமட்டுமின்றி அதிக சமூக தொண்டுகள் செய்து வருகிறார். சில தினங்களுக்கு
முன்பு ஓய்வு பெற்ற இராணுவ வீரருக்காக இவர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு மிகவும் பிரபலமானது.


இந்நிலையில் கவுதம் கம்பீர்-ன் பெயரில் தலைநகர் டெல்லியில் சில பார்கள் இயங்கிவருகின்றன.

அது கவுதம் கம்பீர் நடத்தி வருகிறார் என்று பல செய்திகள் வெளியாகின. இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் எனது பெயரில் டெல்லியில் இயங்கி வரும் பார்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.