திடீர் மாரடைப்பால் கிரிக்கெட் வீரர் மரணம்! ரசிகர்கள் கவலை!

0
50

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் காதீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் அப்துல் காதீர் ஆவார்.இவருக்கு வயது 63 ஆகும்.இவர் பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1990-ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியது தான் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.

1029 ரன்கள் அடித்துள்ளார்.104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1993-ஆம் ஆண்டு நவம்பர் 2- ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது தான் கடைசி ஒரு நாள் போட்டி ஆகும்.

இந்தநிலையில் தான் அப்துல் காதீருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here