“நோ பால்” தரமறுத்த அம்பயரிடம் ஆத்திரமடைந்து வாதிட்ட தோனிக்கு அபராதம்!!

0
138

நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை பட்டது. ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை சிக்ஸ் அடித்து அசத்தினார் ஜடேஜா. 3வது பந்தில் தோனி க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சான்டனருக்கு வீசப்பட்ட 4வது பந்து இடுப்புக்கு மேலே சென்றது. இதற்க்கு அம்பயர் “நோ பால்” என கொடுக்க மறுத்தார்.

இதை பவுண்டரி லைனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தோனி ஆத்திரமடைந்து உள்ளே நேரடியாக வந்து அம்பயரிடம் வாதிட்டார்.

போட்டியின் நடுவே அனுமதியின்றி உள்ளே வந்ததற்காகவும், அம்பயரின் முடிவை மீறி பேசியதாகவும் தோனிக்கு போட்டியில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டது.