கே எல் ராகுல், ஷர்ஃராஸ் கான் அரைசதம் வீண்.. சென்னை அணி அபார வெற்றி!!

0
118

பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதும் ஆட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது,

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

வாட்சன் மற்றும் டு ப்லெஸிஸ் இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வாட்சன் அஸ்வின் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், டு பிளேஸிஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

நடு ஓவர்களில் ஸ்கோர் மந்தமானது, ரெய்னா 17 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

இறுதியில் வந்த ராயுடு மற்றும் தோனி அதிரடியில் இறங்க ரன் கிடுகிடுவென உயர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

அதனை துரத்திய பஞ்சாப் அணிக்கு கெயில் மற்றும் மயங்க் அகர்வால் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மிக்க தடுமாற்றம் கண்டது.

ஆனால், கே எல் ராகுல், ஷர்ஃராஸ் கான் இருவரும் அரைசதம் அடித்து அணியை வலுப்படுத்தினர். கே எல் ராகுல் 55 ரன்களும், ஷர்ஃராஸ் கான் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.