CSK – RCB: முதல் போட்டியின் சில முக்கியமான புள்ளிவிவரங்கள்!!

0
143

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சென்னையில் பலப்பரிட்சை நடத்துகின்றன.

முக்கிய புள்ளிவிவரங்கள்
* அதிசயிக்கத்தக்க வகையில் சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் பெங்களூரு கேப்டன் விராத் கோலி ஆவார். அவர் 732 ரன்கள் குவித்துள்ளார்.
* அதே போல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் சென்னை அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி ஆவார். அவர் 710 ரன்கள் குவித்துள்ளார்.
* சென்னை அணியை கடைசியாக 2014ம் ஆண்டு நடந்த போட்டியில் பெங்களூரு வீழ்த்தியது. அதன் பிறகு நடந்த போட்டிகளில் தொடர் தோல்விகளையே சந்தித்துள்ளது
* அதிலும் குறிப்பாக சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணியை பெங்களூரு அணி கடைசியாக வீழ்த்தியது 2008ம் ஆண்டு