அட்டகாசம் செய்யும் சிஎஸ்கே வீரர்கள்!!! இம்முறையும் கோப்பை சென்னைக்கு தானா??

0
193

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் அணி நம் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோணி தலைமையில் களமிறங்கும் சென்னை அணி எல்லா தொடரிலும் ப்ளே ஆப்ஸ் செல்வது வழக்கம். இந்த வருடம் 12 வது சீசன் வரும் 23 ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் போட்டியில் சென்னை அணி விராத்கோலி தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. அதற்காக சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் விளம்பரத்தில் நடிப்பதற்காக சின்ன தல ரெய்னா, முரளி விஜய் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் ஆட்டம் போடுகின்றனர். அவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இம்முறையும் சென்னை தான் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். முடிவை காத்திருந்து பார்ப்போம்.