“உலக கோப்பை தொடருக்கு பின் என்ன செய்யப்போகிறேன்” மனம் திறந்த கிறிஸ் கெய்ல் !!!

0
128

தற்போது நடந்து கொண்டிருக்கும் உலககோப்பை தொடரில் விளையாடும் மூத்த வீரர்களுள் ஒருவர் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல். ரசிகர்களால் செல்லமாக ‘யூனிவேர்சல் பாஸ்’ என அழைக்கப்படும் இவருக்கு இதுவே கடைசி உலககோப்பை. இதுமட்டுமின்றி சமீபத்தில் அனைத்து முதல் தர போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இவர்.

இந்நிலையில் இவரிடம் இந்த உலககோப்பை தொடருக்கு பின் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்கப்பட்து . அதற்கு பதிலளித்த அவர் , ” இந்த உலககோப்பை தொடருக்கு பின்னும் நான் கண்டிப்பாக விளையாடுவேன். அடுத்து நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டேஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன், அந்த தொடரின் ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்ப்பேன். ஆனால் டி 20 போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். ஒருவேளை எனக்கு அதுகூட கடைசி தொடராக இருக்கலாம்.” என தெரிவித்தார்.