வெறும் 12 போட்டிகளில் மிகப்பெரிய சம்பவம் செய்த ஜஸ்பிரிட் பும்ரா!

0
110

12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3-ஆம்  இடம் பிடித்துள்ளார் இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா.

இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய  பந்துவீச்சாளர் பூம்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

தரவரிசை பட்டியலில் 835 புள்ளிகளை பெற்று 3-ஆம் இடம் பிடித்து உள்ளார்.அதாவது தனது முதலாவது டெஸ்ட் போட்டியின்போது தரவரிசையில் 85 இடத்தில் இருந்தார்.தற்போது 12 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் தரவரிசையில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ராபாடா 851 புள்ளிகள் பெற்று உள்ளார்.