“பாகிஸ்தானுடன் நாங்க இனி ஆடவே மாட்டோம்” ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை!!

0
191

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாநகரில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது என்பவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதன் எதிரொலியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இனி இந்தியா எந்தவித போட்டியிலும் ஆடாது ஐசிசி உறுப்பினர்களிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையே எந்தவித கிரிக்கெட் தொடர்களும் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வந்தனர்.

இந்நிலையில் அதையும் நிகழக்கூடாது என பிசிசிஐ கோரியது.

இதற்கு பதில் தெரிவித்து ஐசிசி நிர்வாகி, “ஏற்கனவே உலக கோப்பை போட்டிக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டு டிக்கெட் விற்பனையும் கிட்டத்தட்ட துவங்கிவிட்டது. இனி இதில் மாற்றம் கொண்டு வர சாத்தியமில்லை. இதற்கு அடுத்து வரும் தொடர்களைப் பற்றி பின்பு ஆலோசிக்கலாம்” கூறி முடித்துக் கொண்டார்.