4வது முறை தொடர்ந்து படுதோல்வியை சந்தித்த பெங்களூரு அணி!!

0
134

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான்.

23 ரன்கள் அடித்த கோஹ்லி, கோபால் பந்தில் வெளியேறினார், அதன் பின்னர் இவரது பந்தில் டி வில்லியர்ஸ் மற்றும் ஹெட்மாயர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம், பார்த்திவ் படேல் அரைசதம் கண்டார்.

ஸ்டாய்நிஸ் 31 ரன்களும் மொய்ன் அலி 18 ரன்கள் எடுக்க..

20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் மட்டுமே அடித்தது.

அதிகபட்சமாக, பார்த்திவ் படேல் 67 ரன்கள் அடித்தார்.

கோபால் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திரிபாதி என அனைவரும் சிறப்பாக ஆட

ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.