2017 சாம்பியன்ஸ் ட்ரோபியை போல இந்தியாவை வெல்லுமா இலங்கை!!!

0
105

உலகக்கோப்பை தொடர்நது கிட்டத்தட்ட இறுதி பாகத்தை நெருங்கி விட்டது. அணைத்து அணிகளும் தற்போது தங்களது கடைசி லீக் போட்டியினை விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இப்போது வேண்டுமானால் இலங்கை அணி பார்ப்பதற்கு சிறிய அணியாக தெரியலாம். ஆனால் கடந்த உலகக்கோப்பை வரை உலகின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றாக திகழ்ந்தது இலங்கை. சங்கக்கார, முரளிதரன், தில்சன், ஜெயவர்த்தனே, ஜெயசூரிய, மலிங்கா என அணைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து இருந்த போது இந்த அணியை வெல்ல அனைத்து அணிகளும் தடுமாறும். 2011 உலகக்கோப்பை போட்டியில் கூட இறுதிப்போட்டிவரை இலங்கை அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் அணியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பெரிய பதிப்பாக அமைந்தது. தற்போது வரை அணியில் மலங்க மற்றும் மேத்தியூஸ் மட்டுமே 2011 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள். அதிலும் தற்போது மேத்தியூஸ் தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதில்லை.

இது அந்த அணிக்கு பெரிய இழப்பாக உள்ளது. மேலும் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. முறைலதரன் மற்றும் மெண்டிஸ் போன்ற உலகின் சிறந்த சுல்பந்துவீச்சாளர்களை கொண்ட இலங்கை அணியில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. அகிலா தனஜெயா மட்டுமே தற்போதைய அணியில் சிறந்த சுழற்பந்து வெச்ளராக இருந்தார். ஆனால் அவரையும் தற்போதைய உலகக்கோப்பை அணியில் அணி நிர்வாகம் சேர்க்கவில்லை.

இருந்தாலும் இலங்கை அணி ஒருசில போட்டிகளில் எவரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி அணிகளையும் வீழ்த்துகிறது. 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் கூட இந்திய அணியின் 330 ரன் டார்கெட்டை எளிதில் வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டி நிச்சயமாக விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்திய அணியை பொறுத்தவரில் இன்றைய போட்டியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. விராட் கோஹ்லி மற்றும் பும்ராஹ்வுக்கு இந்த போட்டியில் ஓய்வளிப்பதாக கூறப்பட்டது, ஆனால் என்ன நடக்கிறது என்பதனை காத்திருந்து பார்ப்போம்.