Connect with us

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இணைந்த பிக் பாஸ் 5 வது சீசனின் பைனலிஸ்ட்..! எதிர்பாராததை எதிர்பாருங்கள் மக்களே..

Bigboss Tamil 5

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இணைந்த பிக் பாஸ் 5 வது சீசனின் பைனலிஸ்ட்..! எதிர்பாராததை எதிர்பாருங்கள் மக்களே..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 5ம் சீசன் முடிந்து தற்போது ஒருவாரம் ஆகிவிட்டது . இன்னும் ஒரே வாரத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கும் பலருக்கு இதோ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் சற்று ஆறுதலாய் இருக்கும் என சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன . அதுவும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறாரார்கள் என்கிற தகவல் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் பல மடங்கு கூட்டி இருக்கிறது. ஜூலி, ஓவியா, வனிதா, பரணி என பரபரப்பு ஏற்படுத்திய பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஐந்தாவது சீசன் போட்டியாளர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு வர இருக்கின்றனர். அந்தவகையில் தாமரை, சுருதி ஆகியோர் இதில் பங்கேற்பது உறுதியாகி இருக்கும் நிலையில் தற்போது நிரூப் கூட இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறது.

பிக் பாஸ் 5ல் பைனலிஸ்ட் ஆக வந்த அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top