Connect with us

IND VS SL முதல் டி20 போட்டி : இலங்கை அணிக்கு பயம் காட்டிய இஷான் கிஷன்…இந்தியா 199 ரன்கள் குவிப்பு..!

Featured

IND VS SL முதல் டி20 போட்டி : இலங்கை அணிக்கு பயம் காட்டிய இஷான் கிஷன்…இந்தியா 199 ரன்கள் குவிப்பு..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக துவங்கியது .

இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெற்று வருகிறது .

இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 44 ரன்களும் இஷான் கிஷன் 89 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 3 ரன்களும் எடுத்து களத்தில் நிலைத்து நின்றனர் .

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து தற்போது 200 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ICC Rankings: அனைத்து Cricket வடிவிலும் இந்திய அணி முதலிடம்!"
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top