Connect with us

“இந்த Hairstyle காட்ட இவ்வளவு நாளா?! அசோக்செல்வன் ரிசப்ஷனில் நடிகர் சிவகார்த்திகேயன்!”

Cinema News

“இந்த Hairstyle காட்ட இவ்வளவு நாளா?! அசோக்செல்வன் ரிசப்ஷனில் நடிகர் சிவகார்த்திகேயன்!”

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுத்தந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மாவீரன் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு, தொடர்ந்து 75 நாட்கள் காஷ்மீரில் நடத்தப்பட்டது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையொட்டி போர்க்கள காட்சிகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதத்தோடு படத்தின் காஷ்மீர் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள படக்குழு தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை திட்டமிட்டுள்ளது.

படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ள நிலையில், இவர்களின் காம்பினேஷன் காட்சிகள் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்காக தன்னுடைய ஹேர்ஸ்டைலை தொடர்ந்து மறைத்து கேப் போட்டுக் கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அசோக் செல்வன் -கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கே21 பட லுக்கில் காணப்பட்டார். இதில் முந்தைய படங்களில் நடித்துள்ளதை போன்ற ஹேர்ஸ்டைலில்தான் அவர் காணப்படுகிறார்.

இதனால் அவர் தொடர்ந்து ஏன் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மறைத்து வந்தார் என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்படுகிறது. ஒருவேளை ராணுவ வீரராக ஒரு ஹேர்ஸ்டைலிலும், இயல்பான இளைஞராக ஒரு ஹேர்ஸ்டைலிலும் அவர் நடித்துள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது சென்னையில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி காம்பினேஷன் காட்சிகள் நடக்கும் நிலையில் தற்போதைய இயல்பான ஹேர்ஸ்டைலில் நடித்தள்ளதாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் தனது முந்தைய படங்களில் இருந்து மாறுப்பட்டு இந்தப் படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

See also  18+..இறைவன் படத்தின் கொடூரமான Sneak Peek…மிரட்டிடும் போலயே!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top