Bigboss Tamil 5
வெண்ணிற ஆடையில் பிக் பாஸ் மேடையை கமல்ஹாசனுடன் பகிர்ந்துகொண்ட சிவகார்த்திகேயன்..! நியூ ப்ரோமோ…
விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் இன்று வெளியான இந்த சேஷனின் கடைசி ப்ரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள் .
இது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் . அவரை உலகநாயகன் கமல்ஹாசன் அவருக்கே உரிய பணியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்றார் .
வெண்ணிற ஆடையில் கெத்தாக பிக் பாஸ் மேடைக்கு வந்த சிவகார்த்திகேயன் இந்த சீசனில் இறுதி போட்டியாளர்களான நிரூப் , ராஜு, பிரியங்கா, அமீர் மற்றும் பாவ்னி ஆகியோருக்கு வாழ்த்துக்களை கூற ப்ரோமோ முடிகிறது.
இதோ அந்த கலக்கல் ப்ரோமோ…
#BiggBossTamil Season 5 The #GrandFinale #Promo3 – இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/8lct9EqmWm
— Vijay Television (@vijaytelevision) January 16, 2022
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
