Connect with us

சென்சார் அதிகாரியை அடிக்க சென்ற எஸ் ஜெ சூர்யா..இப்படி ஒரு சம்பவமா!

Cinema News

சென்சார் அதிகாரியை அடிக்க சென்ற எஸ் ஜெ சூர்யா..இப்படி ஒரு சம்பவமா!

இயக்குனர் எஸ் ஜெ சூர்யா செய்ததை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது…அதாவது வாலி படத்தின் தரமான ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார் அவர்….வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.

அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர் இப்படி ஒரு மனிதரா இவர் என அனைவருமே பாராட்டினர்.

இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது மிகவும் ஈசியாக மாறிவிட்டது….ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் பிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார்…பலரும் இப்படத்தை கொண்டாடினர்,தொடர்ந்து சில படங்களை இயக்கிய அவர் தற்போது நடிப்பில் இறங்கினார் அவருக்கு மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது…

வழக்கம்போல் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இப்படத்திலும் கொண்டாடப்படுகிறது அனைவரும் அவருக்காக இப்படத்தை ஒற்றுக்கொண்டனர்…

எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்த நியூ படத்தில் சிம்ரன் ஹீரோயினாகவும் எஸ்.ஜே.சூர்யாவே ஹீரோவாகவும் நடித்திருப்பார்கள்…முதலில் அந்தப் படத்தில் அஜித்தும்,ஜோதிகாவும்தான் நடிக்க வேண்டியிருந்ததாக கூறப்படுவதுண்டு….ஆனால் ஏதோ காரணங்களால் அவர்கள் விலகிவிட்டார்களாம்..இந்த சூழலில் நியூ படத்துக்காக சென்சார் அதிகாரியை எஸ்.ஜே.சூர்யா அடிக்கப்போனதாக சொல்லப்பட்டு ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.

அதாவது நியூ திரைப்படம் சைன்ஸ் பிக்‌ஷன் திரைப்படமாக இருந்தாலும் அதில் அடல்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்….படம் சென்சாருக்கு போயிருக்கிறது அப்போது படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளில் இருந்த ஒரு பெண் இந்தப் படத்துக்கு யூ சான்றிதழும் இல்லை யூ/ஏ சான்றிதழும் இல்லை என சொல்லி எஸ்.ஜே.சூர்யாவை தரக்குறைவாக பேசினாராம்.

இதனால் கடுப்பான எஸ்.ஜே.சூர்யா தனது கையில் இருந்த செல்ஃபோனை அந்த அதிகாரியின் மீது தூக்கி வீசினாராம்…இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது…இப்படி எல்லாம் செய்தாரா அவர் என பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "விபத்தில் இறந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா! என்ன மனுஷன் யா..!"

More in Cinema News

To Top