Connect with us

காலம் மாறினாலும் பெண்களுக்கு ?. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ -திரை விமர்சனம்

Cinema News

காலம் மாறினாலும் பெண்களுக்கு ?. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ -திரை விமர்சனம்

நவீன தமிழ் சினிமாவிற்கும் பண்டைய சினிமாவுக்கும் இடையிலான முயற்சிகள் மிகக் குறைவு. திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ் இலக்கியத்தின் வளமான நூலகங்களை மாற்றத் தேர்வுசெய்தாலும், அவர்கள் பரபரப்பான அல்லது அதிக மோதல்களைக் கொண்ட கதைகளைத் தேர்வு செய்கிறார்கள். அசோகமித்திரன் மற்றும் சுந்தர ராமசாமியின் புத்தகங்களில் காணப்படும் சாதாரண மனிதனின் கதைகள் நம் சினிமா உணர்வுகளுக்கு மிகவும் நுட்பமானவை. அதை மாற்ற இயக்குனர் வசந்த் சாய் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது அசோக் மித்ரனின் படைப்பில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சோனி liv ஆப்பில் ரிலீசாகி உள்ளது.

கதைக்களம்
1980, 1995, 2007 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் வாழும் சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி என்ற மூன்று பெண்களையும், அவர்கள் சந்திக்கும் அடக்குமுறைகளையும் பேசியிருக்கிறார்.

கணவனுக்காக அப்பளத்தை கடனாக வாங்கும் சரஸ்வதியில் தொடங்கி தன் குடும்பத்துக்காக தன் கனவுகளை விட்டுக்கொடுக்கும் சிவரஞ்சனியில் முடிகிறது படம்.

சரஸ்வதியின் கதை -1980தன்னை அடித்து சித்திரவதை செய்யும் கணவரை மணந்து கொண்டார் சரஸ்வதி .கணவன் செய்யும் கொடுமையாய் சகித்து கொண்டு வாழும் 80 களின் காலகட்ட பெண்களின் வாழ்கை கதையம்சம் கொண்ட கதை . ஆண்களின் அந்த குரூரமான எண்ணத்தை வசந்த் மிக ஆழமாகவே சரஸ்வதியை வைத்து சொல்லியிருக்கிறார்.

தேவகியின் கதை -1995

Sivaranjaniyum Innum Sila Pengalum movie review: Disturbing glimpse into  life of women- The New Indian Express

1997ஆம் ஆண்டு வாழும் தேவகிப்ரைவேசி மிக மிக முக்கியம் . ஆனால் அது அவளது கணவரின் குடும்பத்திற்கு தேவையில்லாததாக தோன்றியது.

கணவருக்கு முன் மனைவி சரிசமமாக அமர்வதையே பாவமாக பார்க்கப்பட்ட காலக்கட்டத்திலிருந்து கணவரின் பெயரை சொல்லி அழைக்கும் நிலைக்கு ஒரு பெண் வந்திருப்பது சுதந்திரம்தானே என்றால் அது மிகவும் தவறான பார்வை. பெயர் சொல்லி அழைப்பது ஒன்றும் அதிசயம் இல்லை. அழைப்பதற்காகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.இதில் தேவகி தனது கணவரை பெயர் சொல்லித்தான் அழைப்பாள். ஆனால் அவளுக்குரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் இல்லை. அதை மிகவும் நுட்பமாக கூறியிருக்கிறார் வசந்த்.

2007 சிவரஞ்சனி:

Sivaranjaniyum Innum Sila Pengalum Review: Parvathy-Starrer Features Some  Sad Tales on Oppression

ஒருவருடைய லட்சியமும், கனவும் அவராலேயே நிறைவேறாமல் போனால் அதைப் பற்றி பேசாமல் விட்டுவிடலாம். ஆனால் அது நிறைவேறாததற்கு மற்றவர்கள் காரணம் என்றால் அவர்களை கொலை குற்றவாளிகள் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.

சிவரஞ்சனியின் குடும்பமும், கணவரும் அந்தக் கணக்கில்தான் வருவார்கள். ரஞ்சனியின் கால்கள் ஓட நினைத்த தூரங்கள் அதிகம், அடைய நினைத்த இலக்குகள் நிறைய. ஆனால் அவளது கால்கள் அப்பார்ட்மெண்ட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கணவரின் வெள்ளை சட்டைக்காக லாண்டரி கடைவரைக்கும், பெட்ரூமிலிருந்து கிச்சன், ஹால் என வீட்டுக்குள்ளும், வீட்டை சுற்றியுமே ஓடிக்கொண்டிருப்பதை காணும்போது நிச்சயம் பார்ப்பவர்களின் மனதில் கனம் ஒன்று உருவாகும்.இப்படி, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் பல விஷயங்களை பேசியிருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,
காலத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சமூகத்தால் மாற்றம் வராது என பளிச்சுனு சொல்லிட்டாங்க .

More in Cinema News

To Top