Connect with us

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் சனிக்கிழமையில ரிலீஸ் பண்றதுக்கு இப்படியொரு காரணமா..?

Cinema News

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் சனிக்கிழமையில ரிலீஸ் பண்றதுக்கு இப்படியொரு காரணமா..?

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நெல்சன் திலீப்குமார். தற்போது இவரது இயக்கத்தின் அடுத்த படைப்பான சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று .

இந்நிலையில் ‘டாக்டர்’ படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு தமிழக சட்டமன்றத் தேர்தலால் அம்முடிவு மாற்றப்பட்டு ரம்ஜான் பண்டிகை அன்று மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுவாக படங்களை வெள்ளிக்கிழமைகளில் தான், வெளியிடுவார்கள். ஆனால், ‘டாக்டர்’ படத்தை சனிக்கிழமை வெளியிட தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷின் சென்டிமென்ட் தான் காரணமாம்.

அவருக்கு 8ம் தேதி ஆகாதாம், 9ம் தேதிதான் ராசியாம். அதனால் தான், 9ம் தேதி படத்தின் ரிலீஸ் என கூறுகின்றனர்.

More in Cinema News

To Top