Connect with us

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..?லீக்கான ஸ்டோரி

Cinema News

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்” பட ட்ரைலரில் கதையை பொய்யா காட்டியிருக்காங்கங்களா..?லீக்கான ஸ்டோரி

சிவகார்த்திகேயன் தனது படங்களின் மூலம் அனைத்து வகையான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். மேலும் அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் த்ரில்லர் படமான ‘டாக்டர்’ அக்டோபர் 9 அன்று திரையரங்கில் ரிலீசாக உள்ளது. தயாரிப்பாளர்கள் இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்ததிலிருந்து எஸ்.கே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ரசிகர்கள் தொடர்ந்து டாக்டர்/ட்ரெய்லர் புதுப்பிப்புக்காக காத்திருக்கிறார்கள். முன்னதாக வெளியான டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது. டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகி யூடியூபில் பல மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது .ந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் ஒரு குரூப் அமைத்துக்கொண்டு குழந்தைகளின் உடலுறுப்புகளை திருடுவதுபோல் காமிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அது உண்மை இல்லையாம், வில்லன் குரூப் அந்த குழந்தைகளை கடத்தி, உடலுறுப்புகளை திருடுவதற்கு முன், அந்த குழந்தைகளை கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைப்பதுதான், சிவகார்த்திகேயனின் நோக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சிவகார்திகேயனனின் டாக்டர் படம் தெலுங்கில் ‘வருண் தி டாக்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

More in Cinema News

To Top