Connect with us

டார்க் காமெடி ஜானரில் பட்டைய கிளப்பிருச்சு…டாக்டர்:திரை விமர்சனம்

Cinema News

டார்க் காமெடி ஜானரில் பட்டைய கிளப்பிருச்சு…டாக்டர்:திரை விமர்சனம்

டாக்டர் திரைப்பட விமர்சனம்: சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து உள்ள டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் முதலில் அமெரிக்காவில் திரைக்கு வந்தது, இன்று காலை 06:00 மணிக்கு இந்த படம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

பீஸ்ட் நெல்சன் படத்தை இயக்கியுள்ளார், சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு KJR ஸ்டுடியோஸ் இணை தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பணியாற்றினார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் உலகம் முழுவதும் சென்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Sivakarthikeyan Doctor (2021) Tamil Full Movie Review Tweets On Viral

டாக்டர் படம் ஒரு இராணுவ தளத்தில் தொடங்குகிறது. வருண் ஃப்ளாஷ்பேக்கை ஆரம்பத்தில் காட்டுகின்றனர் . வருண் மற்றும் பத்மினி (பிரியங்கா) இடையே காதல் பாடல் உடன் ரொமான்டிக்கான ஆரம்பம். பாடலுக்குப் பிறகு கதை மீண்டும் நடப்புக்கு வருகிறது. பிரியங்காவின் குடும்பத்தில் உள்ள சிறு குழந்தை கடத்தல் குழுவால் கடத்தப்பட்டுள்ளது.எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக சமத்து பையனாக காணப்படுகிறார் சிவா. முதல் இரண்டு கியரில் வண்டி மெதுவாக செல்வது போல படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் மெதுவாகவே நகர்கிறது.

Still From Sivakarthikeyan's Tamil Movie 'Doctor' Out, Check Photos

அவர்கள் இருவரும் பிரிந்து செல்ல திட்டமிட்டனர், ஆனால் வருண் ஒரு சிறிய குழந்தையை தேடி அவரது குடும்பத்திற்கு உதவினார். யோகி பாபு நம்மை 100%சிரிக்க வைப்பார் என்பது உறுதி . அதன்பின் டாப் கியரில் செல்லும் படம் எங்கேயும் நிற்கவில்லை. டாக்டர் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக ரவி மற்றும் யோகி பாபுவை கூறலாம். இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார். அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.
மொத்தத்தில் டாக்டர் படம் வசூல் சாதனையை படைக்க உள்ளது என்பது உறுதி.

More in Cinema News

To Top