Connect with us

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ரிலீஸ் பிப்ரவரியில் இந்த தேதியிலா..?

Cinema News

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ரிலீஸ் பிப்ரவரியில் இந்த தேதியிலா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமென்றால் டாக்டர் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடி கிளப்பில் நுழைந்த முதல் சிவகார்த்திகேயன் படம் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் மீது இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. டான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் சமீபத்தில் கூட டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது .கல்லூரி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் பிரியங்கா அருள்,சிவாங்கி,பாலால் ,ஆர் ஜே விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.அந்த வகையில் டான் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது,அதாவது சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனா இந்த தகவல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து காத்திருப்போம்.

மேலும் இந்த பட சாட்லைட் உரிமையை ஜீ தமிழ் மற்றும் Ott உரிமையை ஜீ 5 ஆப் பெற்று உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

More in Cinema News

To Top