Cinema News
காதல் நயாகராவை பார்த்து குத்தாட்டம் போட்ட சிவாங்கி…வைரலாகும் வீடியோ
விஜய் டிவி சிவாங்கி பற்றிய அறிமுகம் சின்னத்திரை ரசிகர்களுக்கும் சரி, சோஷியல் மீடியா யூசர்களுக்கும் சரி தேவைப்படாது. கடந்த 2019-ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி ஆன சிவாங்கி, அதற்கு முன்பே திரைப்பட பாடகி. 2009-ஆம் ஆண்டு ‘பசங்க’ திரைப்படத்தில் ஒரு பாடலை சிவாங்கி பாடியுள்ளார். இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும்? அதுமட்டுமில்லை அவரின் அப்பா, அம்மா இருவரும் பின்னணி பாடகர்கள் தான். இசை குடும்ப வாரிசான சிவாங்கி இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பரிச்சயமானவர்.

தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களையும் பாடி அதில் நடித்தும் வருகிறார். இதன்மூலம் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஷிவாங்கி நடித்திருந்த டான் படம் சமீபத்தில் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இதனிடையே இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்றுவரும் ஷிவாங்கி தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் ராகா ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டொரெண்டோ சென்றுள்ளார். அங்கு இசை நிகழ்ச்சிக்கு இடையில் கிடைத்த கேப்பில் நயாகராவையும் கண்டு களித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர் காதல் நயாகரா என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
