Connect with us

‘சிறுத்தை சிவா’ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..?லீக்கான தகவல்

Cinema News

‘சிறுத்தை சிவா’ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..?லீக்கான தகவல்

‘விஸ்வாசம்’ வெளியானதைத் தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தால் 2019 ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சூரியாவின் ‘சூரரை போற்று’ முடிந்ததும் அவர் நடிக்க வேண்டியிருக்க வேண்டியது. ஆனால் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கினார். அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவும் எதற்கும் துணிந்தவன் மற்றும் வாடிவாசல் படத்தில் நடித்து வருவதால் இவர்கள் இணைவதில் சற்று தாமதமானது.

மேலும் சிறுத்தை சிவா மற்றும் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது .ஏற்கனவே சூர்யா நடிப்பில் சிவா இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டூடியோகிரீன் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://twitter.com/StudioGreen2/status/1120288573083664384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1120288573083664384%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindwoods.com%2Ftamil-movies-cinema-news-ta%2Fbig-breaking-this-kollywood-hero-joining-next-with-siruthai-siva.html

More in Cinema News

To Top