Connect with us

சிம்பு -ஹன்சிகாவின் மஹா படத்தின் நியூ அட்டகாசமான ட்ரைலர்!

Cinema News

சிம்பு -ஹன்சிகாவின் மஹா படத்தின் நியூ அட்டகாசமான ட்ரைலர்!

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்தில் சிலம்பரசன்.TR முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள மஹா திரைப்படத்தில் ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் UR.ஜமீல் இயக்கத்தில் மஹா திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஹா திரைப்படத்தை ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் அவர்கள் தயாரித்துள்ளார். ரிலீஸுக்கு பின் மஹா திரைப்படம் ஆஹா தமிழ் (aha tamil) OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹா திரைப்படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் வாலு திரைப்பட சமயத்தில் காதலித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர்.இந்த நிலையில் காதலித்து பிரிந்த இருவரும் மஹா திரைப்படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிட முயற்சித்து வருவதாக படக்குழுவினர் கூறினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரோஹித் சர்மாவுக்கு காயம்… நாளைய போட்டியில் இடம்பெறுவாரா?

More in Cinema News

To Top