Connect with us

நடிகர் சிம்புவுக்கு இவருடன் தான் திருமணமா..??வெளியான சூப்பர் தகவல்!

Cinema News

நடிகர் சிம்புவுக்கு இவருடன் தான் திருமணமா..??வெளியான சூப்பர் தகவல்!

நடிகர் சிம்புவுக்கு தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார் பல ரசிகர்களும் அவரின் Comebackக்காக காத்திருந்தனர்….ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர் இருந்தாலும் அதனை சரி செய்ய அதன் பின் முயற்சித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார் அவர்.அரசியல் களத்தையும், டைம் லூப் கான்செப்ட்டையும் மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது இது செம ஹிட் கொடுத்தது சிம்புவின் எனர்ஜியான நடிப்பு வெங்கட் பிரபு திரைக்கதை ஆகியவை இணைந்து படத்தை மெகா ஹிட்டாக்கின என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் அந்தப் படமும் பெரிதாக போகவில்லை என்று தான் சொல்லவேண்டும்,அதனை தொடர்ந்து நடித்த பத்து தல படம் சறுக்கியது.கன்னட படமான மஃப்டி படத்தின் ரீமேக்காக அது அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக ஹிட் கொடுக்க நினைத்த எஸ்டிஆர் சறுக்கியது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட் கொடுத்தது.

தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகியிருக்கிறார் படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்தப் படத்தின் மூலம் சரி பண்ணிவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுவருவதாக சொல்லப்படுகிறது..

இதற்கிடையே சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் அவரிடம் நீண்ட வருடங்களாக திருமணம் பற்றி யார் கேட்டாலும் சரியான பதிலை சொல்லாமல் மழுப்பி விடுவார்.இந்நிலையில் 40 வயதாகும் சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்றும் சினிமா ஃபைனான்ஸியர் ஒருவரின் மகளைத்தான் அவர் திருமணம் செய்ய போகிறார் என்ற தீயான தகவல்கள் பரவி வருகிறது பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தாய்க்கு அசிஸ்டெண்டாக மாறிய ஷரியாவின் மகள் - அவரே பதிவிட்ட வைரல் போட்டோஸ்…

More in Cinema News

To Top