Connect with us

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு…

Celebrities

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு…

இந்திய கிரிக்கெட் அணியின் துடிப்பான இளம் பேட்ஸ்மேனாக வலம் வரும் ஷ்ரேயஸ் ஐயர் தனது அபார திறமையை சமீப காலமாக அணைத்து போட்டிகளிலும் காட்டி வருகிறார்.

இதனால் இந்திய அணி எதிகொள்ளும் அனைத்து போட்டிகளிலும் அணிக்கு வெற்றிக்கு இவரது பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது . சொல்லி அடிப்பது போல் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகிறது.

IND vs SL: Shreyas Iyer becomes first Indian batter to achieve sensational  Test record with twin fifties in Bengaluru | Cricket - Hindustan Times

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். இதனை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 80 மற்றும் 25 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 57, 74 மற்றும் 73 என தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசி வியப்பில் ஆழ்த்தினார் .

IPL Auction 2022: KKR Buy Shreyas Iyer, Find Their New Captain?

இதன் மூலம் இந்த விருதுக்கான பரிந்துரையிலிருந்த அமீரக வீரர் அரவிந்த் மற்றும் நேபாள வீரர் தீபேந்திரா சிங் ஆகியோரை முந்தியுள்ளார் ஷ்ரேயஸ்.

இந்த பக்கம் மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top