பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகை ஒருவர் கேட்ட சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?வெளியான தகவல்

0
194

பிக் பாஸ் தமிழிலும் முதல் மூன்று சீசனும் ஜூன் மாதம் துவங்கி நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் திட்டமிட்டபடி ஜூன் மாதம் நிகழ்ச்சியை துவங்க முடியவில்லை. பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். முதல் மூன்று சீசன்களை போன்று இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது.

This Tamil Actress Demanded Rs. 1 Crore From Bigg Boss To Stay In The House  ?? | Chennai Memes

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஷில்பா மஞ்சுநாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவரோ ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டாராம். ஆனால் இந்த தகவலை ஷில்பா மஞ்சுநாத் இதுவரை உறுதி செய்யவில்லை. விஜய் ஆண்டனியின் காளி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஷில்பா மஞ்சுநாத். ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்திலும் நடித்துள்ளார் ஷில்பா. இரண்டு தமிழ் படம் தான் வெளியாகியுள்ளது.