Connect with us

“எப்படி இருக்கு இராவண கோட்டம்?! விமர்சனம் இதோ..!”

Cinema News

“எப்படி இருக்கு இராவண கோட்டம்?! விமர்சனம் இதோ..!”

மதயானைக்கூட்டத்தில் தென் தமிழக மக்களை விக்ரம் அழகான கலைநயத்துடன் ராவாக காண்பித்தது மக்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அது இதில் மிஸ்ஸிங். மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலமாக குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாழ்க்கையை திரையில் தத்ரூபமாக காண்பித்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாறன். ஆனால் அந்தப்படத்தில் அவர் ஜாதியை தூக்கிப்பிடித்ததாக விமர்சனங்கள் எழவே, அதுவே அவரது திரைவாழ்க்கையில் கறையாக அடுத்தப்படம் கிடைக்க பல வருடங்கள் ஆகிவிட்டன.

இப்போது ‘ராவணக்கோட்டம்’ திரைப்படத்தின் மூலமாக மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெற்றி வேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார்.

கதையின் கரு:

இராமநாதபுரம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள். மேலத்தெரு தலைவராக பிரபுவும், கீழத்தெரு தலைவராக இளவரசும் வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஊருக்குள் இருதரப்புக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் பேச்சு வார்த்தையிலேயே தீர்க்கப்பட்டு விடுகின்றன. இந்த நிலையில் கார்ப்ரேட் கம்பெனி ஒன்று அங்கு இருக்கும் இயற்கை வளம் ஒன்றை எடுக்க அரசியல் வாதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறது. இந்த சூழ்ச்சியில் பிரபுவும், இளவரசும் கொல்லப்படுகிறார்கள். தலைவர்கள் இருவரும் இல்லாத நிலையில், இருப்பகுதி மக்களிடையே மோதல் வெடிக்கிறது. இந்த மோதல் எங்கு போய் முடிந்தது. இதனிடையே சாந்தனுவுக்கும், ஆனந்திக்கும் முளைத்த காதல் என்ன ஆனது? என்பதை சீமை கருவேல மர அரசியலோடு கலந்து சொன்னால் அதுதான் இராவணக்கோட்டம் திரைப்படத்தின் கதை!

ஊர்தலைவராக பிரபு. நடை, உடை, பாவனை என அனைத்திலும் தலைவருக்கான அக்கறையையும், அரவணைப்பையும், ஆக்ரோஷத்தையும் அளவாக கடத்தியிருக்கிறார். இளவரசு வழக்கம் போல கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். சாந்தனுவுக்கு இது வித்தியாசமான களம். பெரும்பான்மையான இடங்களில் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எமோஷனை கடத்துவதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து இருக்கலாம். அவரின் காதலியாக வரும் ‘கயல்’ ஆனந்தி கதாபாத்திரத்தில் பெரிதாக ஆழம் இல்லை. சாந்தனுவின் நண்பனாக நடித்திருந்த சஞ்சய் சரவணன் அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் உணர்ந்து நடித்திருக்க வேண்டும்.

1957 ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்து கதையை சொல்லி இருக்கிறார் விக்ரம் சுகுமாறன். ஒரு பக்கம் முத்துராமலிங்கத்தேவரை காட்டும் அவர் இன்னொரு புறம் அம்பேத்கரையும் காண்பிக்கிறார். ஆனால் சம்பவம் நடப்பது அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மதயானைக்கூட்டத்தில் தென் தமிழக மக்களை விக்ரம் அழகான கலைநயத்துடன் ராவாக காண்பித்தது மக்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அது இதில் மிஸ்ஸிங். அந்தத்திரைப்படத்தில் விக்ரம் எழுதிய அனைத்து கதாபாத்திரங்களும், அவை வெளிப்படுத்திய நடிப்பும் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த அளவுக்கான பெரிதான கதாபாத்திரங்கள் எதுவும் இதில் இல்லை என்பது படத்தின் பலவீனம்.

See also  "இசைஞானியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!"

முதல் பாதியிலேயே கதை இப்படித்தான் செல்லப்போகிறது என்பதை நம்மால் முன்னமே யூகித்து விட முடிகிறது. இருப்பினும் சீமைகருவேல மரங்களின் பாதிப்பையும், அதை வைத்து மக்களிடம் அரசியல் வாதிகள் நடத்தும் ஆட்டத்தையும், அதனால் மக்களுக்குள் எப்படி ஜாதிக்கலவரம் வெடித்தது என்பதையும் காட்சிகளாக சொல்லிய விதம் இராண்டாம் பாதியை என்கேஜிங்காக கொண்டு சென்றது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்தோடு ஒன்றவில்லை. அது படத்தின் வீரியத்தை குறைத்து விட்டது. ஒளிப்பதிவு ஓகே.. வன்முறை சம்பந்தமான காட்சிகள் பார்க்கும் அளவிலேயே காட்டப்பட்டது ஆறுதல். காட்சிகளிலும், கதையிலும் இன்னும் கொஞ்சம் புதுமையை புகுத்தி இருந்தால் இராவணக்கோட்டம் கொண்டாட்டமாய் மாறியிருக்கும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top