Connect with us

குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்ற இயக்குனர்.. “அழகிய புகைப்படங்கள் இதோ”

Cinema News

குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்ற இயக்குனர்.. “அழகிய புகைப்படங்கள் இதோ”

இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.அந்த புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது..

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருகிறார்.இரண்டுக்கும் முழு efforts போட்டு வருகிறார் இவர்.

மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இதில் RC15 படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி நடித்து வருகிறார். ராம்சரண்- கீரா அத்வானி நடிக்கின்றனர்..

நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்பாராஜ் அவர்கள் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது..

அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் அவருடைய மனைவி ஈஸ்வரி, மகன் அர்ஜித், மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் உடன் உள்ளனர்..இந்த குடும்ப புகைப்படம் இப்போது வைரல் ஆகிவருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top