ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் கொரியன் நடிகையா..?

0
75

திரையில் தனது பெரிய மெகா பட்ஜெட் படத்துக்கு என அறியப்பட்ட இயக்குனர் ஷங்கர், கடைசியாக ரஜினிகாந்த் நடித்த 2.0 ஐ இயக்கியுள்ளார், மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 இயக்கத்தில் இருந்தார்.தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டாக நடைபெறாமல் கால தாமதமாகி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஷங்கரின் அடுத்த படம் டோலிவுட் ஹீரோ ராம்சரன் கதாநாயகனாக நடிக்கும் படமாக இருப்பதாகவும் இது ஒரு பான் திரைப்படம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் 50வது படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் இந்திய சினிமாவில் இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மும்மொழிப் படத்தை தில் ராஜு, ஷ்ரிஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் உள்ளது. இந்நிலையில், கன்னட நடிகர் சுதீப்பை அணுகி கதை சொல்லியிருக்கிறார்கள். சுதீப் முக்கிய வேடத்தில் இதில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், சுதீப் நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.

Ram Charan to Romance K-Drama Actress Suzy Bae in Upcoming Indian Film  Helmed by Shankar?

அதேபோல் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட கொரிய நடிகை Suzy Bae இதில் நடிக்கயிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. Suzy Bae நடிகை, மாடல். வேகாபாண்ட் போன்ற கொரியாவின் முக்கிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.எனவே இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும் வரை பொறுத்திருந்து காத்திருபோம்.