Connect with us

கடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்…அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர்

Featured

கடவுளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்…அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர்

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா இல்லங்களில் மட்டுமே இந்த ஆண்டு கொண்டாட அரசு அறிவித்து உள்ளதை ஒட்டியதோடு மட்டுமல்லாமல்,பொதுமக்கள் தானாகவே விநாயகர் சிலையை கரைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.இதை மீறுபவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை என அறிவித்து இருந்தது.இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. டாஸ்மாக்கை திறந்து அதிகமான மக்களை விடுகிறார்கள். எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையிலெடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தார் .

அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது என்றும், வீட்டில் இருந்தே விநாயகரை வழிபட்டாலும், அவர்களின் கோரிக்கையை விநாயகர் ஏற்றுக் கொள்வார் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

More in Featured

To Top