Connect with us

“Unlimited Romantic வெற்றி! வசூலை குவிக்கும் ‘குஷி’ படம்!”

Cinema News

“Unlimited Romantic வெற்றி! வசூலை குவிக்கும் ‘குஷி’ படம்!”

விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள குஷி திரைப்படம் இந்த வாரம் வெளியானது. முதன்முறையாக விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள குஷி படத்துக்கு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், இந்தப் படத்தின் ட்ரெய்லரும் ரொமாண்டிக் மோடில் இருந்ததால், அட்வான்ஸ் புக்கிங் அமர்க்களப்பட்டது. சமந்தாவின் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த யசோதா, சாகுந்தலம் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முக்கியமாக இந்த இரண்டு படங்களுமே சமந்தாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா கெமிஸ்ட்ரியில் சில ரொமாண்டிக் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. காதல் பின்னணியில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் மூவியாக உருவாகியுள்ள குஷி, ரசிகர்களுக்கு கல்ர்ஃபுல் விருந்து வைத்துள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன்பின்னர் அவர்களுக்குள் நடக்கும் ரொமாண்டிக் ப்ளஸ் ஈகோ யுத்தம் தான் குஷி. இதனால், விஜய் தேவரகொண்டாவுடன் பல காட்சிகளில் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளார் சமந்தா.

இது ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால், குஷி படத்தின் கலெக்‌ஷனும் கல்லா கட்டியுள்ளது. அதன்படி, குஷி திரைப்படம் முதல் நாளில் மொத்தமாக 16 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் முதல் நாள் வசூல், 30 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், முதல் இரண்டு நாட்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாம் குஷி. முதல் நாளில் பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல ஓபனிங் கிடைத்ததால், இரண்டாவது நாளில் குஷி படத்துக்கான ஸ்க்ரீன்கள் அதிகம் ஒதுக்கப்பட்டன.

இதனால், இரண்டாவது நாளில் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி குஷி படத்தின் இரண்டு நாள் வசூல் மொத்தமாக 50 கோடியை கடந்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் குஷி படத்துக்கான ஸ்க்ரீன்கள் அதிகமாக்கப்பட்டுள்ளதாம். இதனால், வரும் நாட்களிலும் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோருடன் ஜெயராம், சரண்யா, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா..?இயக்குனருக்கு கூட இவ்வளவு கிடையாது"

More in Cinema News

To Top