சூது கவ்வும் 2 -ஆம் பாகத்தில் நடிக்கும் சத்தியராஜ்…?

0
70

விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கினார் , பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கிட்டத்தட்ட ரிலீசாகி 7 ஆண்டுகள் கடந்த பின்பும், அதன் 2-ம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சூது கவ்வும் 2 படத்தை ‘யங் மங் சங்’ படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்க, தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிப்ரவரியில் படபிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.