Celebrities
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது? காருக்குள் கொடுத்த கலக்கல் போஸ்சால் இணையத்தில் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் இதோ..!
சமீபத்தில் பாக்ஸிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை பார்த்த அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினார்கள்.

ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் நிஜ பெயர்கள் மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் மிக ஆழமாய் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருந்தார் புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித்.

குறிப்பாக இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயனின் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அதிகளவில் கவனம் ஈர்த்து வெகுவான பாராட்டுகளையும் எண்ணற்ற ரசிகர்களையும் சம்பாதித்தார் .

தற்போது வசந்தபாலனின் ‘அநீதி’, பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது‘ படங்களில் நடித்துவரும் துஷாரா விஜயன் கருப்பு நிற காஸ்டியூமில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
