Connect with us

” பத்த வெச்சி பறக்க விட போறோம் “…கார்த்தியின் சர்தார் பட ட்ரைலர் வெளியானது …வீடியோ

Cinema News

” பத்த வெச்சி பறக்க விட போறோம் “…கார்த்தியின் சர்தார் பட ட்ரைலர் வெளியானது …வீடியோ

நடிகர் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, கார்த்தியின் சர்தார் படட்ரைலர் வெளியாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் சர்தார்.

இதில் கார்த்திக்குடன் ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ள நிலையில், மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சர்தார் படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது.

சர்தார் படத்தின் டீசர் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. இந்த டீசரில் கார்த்தி பல தோற்றங்களில் ரகசிய ஏஜெண்டாக நடித்து மிரட்டியிருந்தார். கார்த்தியின் இன்ட்ரோ சீன், செம்ம மாஸாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி பாடிய ‘ஏறுமயிலேறி’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டது. தெருக்கூத்து வடிவில் உருவாகியிருந்த இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சர்தார் படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது ரிலீசாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலைவர் 170 படத்தின் சூப்பர் Update Loading…எப்போ தெரியுமா?

More in Cinema News

To Top