கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலிருந்து மற்றொரு முக்கிய நிர்வாகி விலகல்…பெரும் பரபரப்பு

0
18

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்விக்கு பின்னர் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் விலகினார்.அதற்கு முன் கமீலா நாசர் விலகியிருந்தார். இன்னும் சில நிர்வாகிகள் விலகி இருந்த நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யுமான சந்தோஷ் பாபுவும் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கமல்ஹாசனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.இவர் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கட்சி தோல்விக்கு பின் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகுவதுது பலருக்கு புரியாத அதிர்ச்சியாக உள்ளது.