Celebrities
சத்தமின்றி வெற்றிநடைபோடும் சந்தானத்தின் குலுகுலு திரைப்படம்..! 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..?
தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடக்கி தற்போது கலக்கல் கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். கதையின் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது ஆக்சன் கதாநாயகனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தனகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குளுகுளு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி கடந்த 29 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் சத்தமின்றி வெளியானது .

அதுல்யா சந்திரன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, மாறன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரெட் ஜெய்ன்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரம் இப்படம் . 6 நாட்களில் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
