Connect with us

விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்த செய்தியை கேட்டு..முதல் ஆளாய் வந்த சந்தானம்..!

Cinema News

விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்த செய்தியை கேட்டு..முதல் ஆளாய் வந்த சந்தானம்..!

இன்று அனைவர்க்கும் வருத்தம் அளிக்கும் ஒரு செய்தி வந்துள்ளது…அதாவது 12ம் வகுப்பு படித்து வந்த 16 வயதே ஆன விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தனது அப்பா விஜய் ஆண்டனியின் அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

பல சினிமா பிரபலங்களும் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் இன்று மதியத்துக்கு மேல் வீட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் இன்று மாலையே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீதும் அந்த பெண் தொகுப்பாளினி மீதும் மான நஷ்ட வழக்கு பதியப் போவதாகவும் மிகுந்த மன உளைச்சலில் தான் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்…இப்படி தொடர்ந்து அவருக்கு கஷ்டங்கள் நடக்கும் நேரத்தில் இதுவும் நடந்துள்ளது….

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து சம்பவத்தை கேள்விப் பட்டதும் நடிகர் சந்தானம் உடனடியாக விஜய் ஆண்டனி வீட்டிற்கு விரைந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன…அதனை போல சினிமாவை சேர்ந்த பலரும் வந்துள்ளனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல வருட காத்திருப்புக்கு பின் பூமியில் கால் பதிக்க இருக்கும் துருவ நட்சத்திரம்…வைரலாகும் புது ட்ரைலர்!

More in Cinema News

To Top