Connect with us

தோல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா…?அவரது மேனேஜர் வெளியிட்ட ஷாக் தகவல்…

Cinema News

தோல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா…?அவரது மேனேஜர் வெளியிட்ட ஷாக் தகவல்…

நடிகை சமந்தா அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஹரிஷ் இயக்கியுள்ள யசோதா படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாக ஒரு தகவல் பரவி வந்தது.

அதாவது அவர் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் சமந்தா அமெரிக்கா சென்றது உண்மைதான் என சொல்லப்பட்டுகிறது. அதேசமயம் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெறும் வதந்தி என சமந்தாவின் மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஞ்சான் படத்தின் ஷூட்டிங்கின் போது அதிக வெளிச்சத்தில் நடித்ததால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக சமந்தா சிகிச்சைப் பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top