Connect with us

திடீர் மாரடைப்பு..!! ரீல் சல்மான் கான் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Salman_Khan_Body_Double

Cinema News

திடீர் மாரடைப்பு..!! ரீல் சல்மான் கான் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

நடிகர் சல்மான் கானின் டூப்பாக சண்டை காட்சிகளில் நடிக்கும் சாகர் பாண்டே இன்று திடீரென காலமானார். மும்பையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாகர் பாண்டேவுக்கு சுமார் 50 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவர் சல்மான் கானுடன் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பஜ்ரங்கி பைஜான், டியூப்லைட், பிரேம் ரத்தன் தன் பாயோ, தபாங், தபாங் 2 போன்ற பெரிய படங்களிலும், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சல்மான் கானுக்காக பாடி டபுளாகப் பணியாற்றியவர் சாகர்.இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அடிக்கடி மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

சாகரின் நெருங்கிய நண்பரும், ஷாருக்கானின் தோற்றத்தை கொண்டுள்ளவருமான ராஜு ரைக்வார், ஜிம்மில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், இரண்டு ஜிம் பயிற்றுனர்கள் அவரை சுவிதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினார். இதையடுத்து அவரை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே ட்ராமா சென்டர் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

மதியம் 2.00 மணியளவில் சாகர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக ராஜு கூறினார். சாகர் உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாகரின் இறுதி சடங்குகள் பிரதாப்கரில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாலிவுட் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top