Connect with us

“சொல்வதற்கு எப்போதும் நேர்மாறாக செய்வார்! சேவாக்கை கலாய்த்து, வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!”

Sports

“சொல்வதற்கு எப்போதும் நேர்மாறாக செய்வார்! சேவாக்கை கலாய்த்து, வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!”

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்தவர்கள் சச்சின் மற்றும் சேவாக். இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டங்கள் இந்திய ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காதவை. ஓப்பனிங் வீரர்களாக இருவரும் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

களத்துக்கு வெளியேயும் சேவாக் – சச்சின் இடையே நல்ல நட்பு உண்டு. தற்போது இருவரும் ஓய்வுபெற்றுள்ள நிலையில் இருவரும் அவ்வப்போது களத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

இன்று சேவாக் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் சச்சின், “நான் ஒருமுறை பொறுமையாக விளையாடும்படியும், கிரீஸில் இருக்கும்படி கூறினேன். அதற்கு “சரி” என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தையே பவுண்டரிக்கு அடித்தார்.

எப்போதும் நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, அவருக்கு அதே ஸ்டைலில் சொல்கிறேன், தயவுசெய்து ஒரு சலிப்பான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் விரு” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்களே எதுக்கும் அஞ்ச வேண்டாம் நாங்க இருக்கோம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

More in Sports

To Top