Connect with us

ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு..! அய்யோ பாவம் நிலையில் ரவுடி பேபியும் எடுபுடி சிக்கந்தரும்..!

Featured

ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு..! அய்யோ பாவம் நிலையில் ரவுடி பேபியும் எடுபுடி சிக்கந்தரும்..!

தமிழக மக்களுக்கு tiktok மூலம் அறிமுகமானவர் ரவுடி பேபி என்று அவரே சொல்லிக்கொள்ளும் சூர்யா இவரின் கசமுசா பேச்சாலும் அடாவடியான செயல்களாலும் பற்பல வழக்குகளால் தற்போது சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஓரு புகாரின் பேரில் வழக்கு பதியப்பட உள்ளது.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் , மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், மதுரை திருநகரில் வசித்த ரவுடி பேபி சூர்யா மற்றும் எடுபுடி சிக்கா என்ற சிக்கந்தர் இருவரும், சமூக ஊடகங்களில் மக்களை கன்சுலிக்கவைக்கும் ஆபாச பேச்சுகளை பேசி வருவதாக கூறியுள்ளார்.

Coimbatore rowdy baby surya arrested with her lover reports | Tamil Nadu  News

மேலும் தேசிய கீதத்தை தவறாக பாடியதாகவும், உடந்தையாக இருக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் முத்துக்குமார் கொடுத்த மனுவை பெற்று கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையருக்கு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த மனுவின் படி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கறிஞர் முத்துக்குமாரை, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

Rowdy Baby Surya Chikka Breakup: Tik Tok Fame Rowdy Baby Surya Sikandar  Love Break-up | ‛உயிரே உயிரே பிரியாதே...' முறிந்தது ரவுடி பேபி-சிக்கா காதல்  ... துபாய்க்காரருக்கு ...

அதன்படி வழக்கறிஞர் முத்துக்குமார், நீலமேகம், முகமது ரஸ்வி, மேஜர்குமார், ராஜு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ பிரியா விசாரணை நடத்தினர் .

அந்த விசாரணையில் ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top